காவேரி துலா ஸ்நானம் பற்றி ஒர் பார்வை
தமிழ் பஞ்சாங்கம் படி ஒவ்வொரு மாதத்தையும் நாம் பண்டைய தமிழர்கள் ஒவ்வொரு ராசியாக கணக்கிட்டு மாதம் ஒர் ராசியாக பிரித்தனர் அதன் படி ஐப்பசி மாதத்தை துலா மாதமாக கொண்டாடுகிறோம்.
இந்த வருடம் 18.10.2017 முதல் 16.11.2017 வரை ( ஐப்பசி மாதம் 30 நாட்கள்) ஐப்பசி மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தல் உத்தமம்.
இந்த மாதத்தில் 63 கோடி புண்ய தீர்த்தங்கள் 14 லோகத்தில் இருந்து இந்த பூலோகத்தில் காவிரியில் கலந்து விடுவதாக ஐதீகம்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாபங்கள் அனைத்தும் இந்த காவேரியில் ஸ்நானம் செய்யும் போது விடுபடுவதாக மஹான்கள் வாக்கு.
காலை சூர்ய உதயத்திற்கு முன்பு ப்ரஹ்ம முகூர்த்தத்தில் ஸ்நானம் செய்தல் மஹா உத்தமமாக கருதப்படுகிறது.
துலா மாதத்தில் காவேரியில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் தங்கக்குடத்தில் யானை மீது எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
துலா மாதத்தில் கங்கை தன்னிடம் சேரும் பாபங்களை போக்கிக் கொள்ள கர்நாடகாவில் உள்ள (தக்ஷிணகங்கா) ப்ரஹ்மகிரி மலையடிவாரத்தில் இருந்து நம் தமிழ்நாட்டில் காவேரியில் வந்து கலப்பதால் இந்த துலா ஸ்நானம் மிகவும் விசேஷம்.
அது மட்டுமல்ல 1 யுகங்கள் கங்கையில் குளித்த பலன் பெற ஒரு நாள் இந்த துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தால் சுலபமாக பலன் கிட்டும் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.
ஸ்நானம் முடித்தவுடன் அவரவர்கள் யதா சக்திக்கு தக்கவாறு தானங்கள் செய்தால் தான் ஸ்நானம் பண்ண பலன் பண் மடங்குக்கிட்டும்.
இந்த ஆண்டு நம் காவேரியில் 144 ஆண்டுக்கு ஒர் முறை வரும் மஹா புஷ்கரம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதை மேலும் விசேஷமாக சொல்லலாம்.
ஆகவே பக்த அன்பர்கள் அனைவரும் இந்த துலா மாதத்தில் ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கன் அருள் பெற வேண்டும்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்
The Kaviri that originates in Coorg is the one which keeps flowing, get more rivers joining it and becomes wide near Erode and Trichy. It is called Kaviri right from Coorg until it joins the ocean at PoompuhAr. As to why the river gets glory at MayUram (at tulA ghaTTam) is left to imagination. By the way I am originally from Mayuram.
ReplyDelete