MY INDIA
Wednesday, November 17, 2021
FAQs on APY vs NPS
Sunday, November 26, 2017
அயோத்தி ராமரின் உண்மையான வரலாறு
அயோத்தி ராமரின் உண்மையான வரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------
இந்துக்களின் புனித தலமாக விளங்கும் மிகவும் முக்கியமான ஏழு நகரம் அவை அனைத்தும் முக்தி தரும் ஸ்தலங்கள்.
அவற்றில் ஒவ்வொன்றும் ஸ்ரீமான் நாராயணனின் அடையாளங்களாக அறியப்படுகிறது
அவந்திகா பெருமாளின் திருவடியாகவும்,
காஞ்சி இடுப்பு பகுதியாகவும்,
துவாரகா நாபி பகுதியாகவும்,
மாயா மார்புப்பகுதியாகவும்,
மதுரா கழுத்து பகுதியாகவும்,
காசி மூக்கு பகுதியாகவும்
மற்றும் முக்கியமான தலை பகுதி அயோத்தியாவாக கருதப்படுகிறது.
ராமர் முதலில் நாம் மானிட ஜென்மம் எடுத்தால் அந்த அவதாரத்திர்க்கு தனி சிறப்பு உண்டு இதை நாம் நன்கு அறிவோம்.
நாம் சனாதானா தர்மத்தின் படி மேற்குறிப்பிட்ட அனைத்து நகரங்களிலும் இந்துக்களின் முக்கியமான வழிபாட்டு தலங்களில் இருக்கிறது.
இந்த ஸ்தலத்தில் ஐந்து ஆழ்வார்கள் மொத்தம் 13 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
நம் ஆழ்வார், பொரியாழ்வார், தொன்டரடிபொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், மற்றும் திருமலையில் படியாய் கிடந்தேனே என்று மங்களாசாசனம் செய்த குலசேகர ஆழ்வார்.
இதுவே வரலாற்றில் மிக பெரிய சாட்சியாக திகழ்கிறது ராமர் கோயில் அங்குதான் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
முகமதியர்கள் படையெடுப்பை பற்றி நாம் அறியாத பல மறைக்கப்பட்ட உண்மைகள் உண்டு. அதற்கு ஓர் சிறந்த உதாரணம் பாபர் ( நாம் இந்திய வரலாற்றில் இவரைப்பற்றி சிறப்பாக படித்திருக்கிறோம் ஆனால் அது உண்மை இல்லை)
கிபி.1528-ம் ஆண்டு மார்ச் இறுதியில் அயோத்தி வந்த பாபர் நகருக்கு வெளியே முகாமிட்டிருந்தார்.
அப்போது தான் அவர் தன்னுடைய தளபதி மீர் பாகியிடம் ராமர் பிறந்த இடமான( ஜன்மஸ்தான்) ராம ஜென்ம பூமியில் உள்ள ராமர் ஆலயத்தை இடித்து விட்டு அதே இடத்தில் மசூதி கட்ட உத்தரவிட்டுள்ளார்.
இப்படித் தாங்கள் செல்லும் இடங்களிலும், வெல்லும் இடங்களிலும் மசூதிகளைக் கட்டுவதை முகலாய அரசர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
(இதற்கு ஆதாரமாக இருந்த பாபரின் தினசரி நாட்குறிப்பான 'பாபர் நாமா' வில் சரியாக 1528 ஏப்ரல் 2 முதல் செப்டம்பர் 18 வரை 5 மாதங்கள் வரையான குறிப்புகள் பின்னாளில் காணாமல் போய் விட்டது.)
பின்னர் 1530-ல் பாபர் இறந்தவுடன் ராமர் கோவில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று எண்ணிய அயோத்தி நகர இந்துக்கள், மசூதி மீதும், மசூதி பொறுப்பாளர்கள் மீதும் ஹுமாயுன்,அக்பர், ஔரங்கசீப் காலத்திலேயே 30 க்கும் மேற்பட்டமுறை தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
இந்த சண்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் தியாகம் செய்தது நாம் வரலாறு பதிவு செய்திருக்கிறது.
பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு சமாதான ஏற்பாடாக 1883 -ல் மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபடுவதற்கு 'ராம் சபூதரா' என்கிற ஒரு தற்காலிக பீடம் அமைக்கப்பட்டது.
(இந்த கொடுமையை பாருங்கள்)
பின்னர் 1885-ல் மஹந்த் ரகுவர் தாஸ் என்பவர் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ராமர் அவதரித்த இடத்தில் இருந்த ராமர் ஆலயத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது.
எனவே அந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு ஆலயம் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி F.E.A கௌமியர் 'இந்துக்களுக்கு சொந்தமான புண்ணிய பூமியில் மசூதி கட்டப்பட்டது வருத்தத்திற்கு உரியது.
ஆனால் இது 356 வருடத்திற்கு முந்தைய சம்பவம். இப்போது சரி செய்வதற்கான காலம் கடந்து விட்டது' என்று தீர்ப்பளித்துள்ளார்.
பின்னர் பல்வேறு கலவரங்கள்,தாக்குதல்களால் சேதமடைந்ததால் மசூதி 1934- ஆம் ஆண்டு முதல் மூடி வைக்கப்பட்டதுடன், தொழுகையும் நடைபெறவில்லை.
பின்பு 1949 டிசம்பர் 22 -ஆம் தேதி நள்ளிரவில் உள்ளூர் இந்துக்கள் ஆயிரக் கணக்கானோர் திரண்டு 'ராம் சபூதரா பகுதியில் இருந்த ராமர், சீதா தேவி, லஷ்மணன் சிலைகளை மசூதியின் மையப் பகுதியில் நிறுவியுள்ளனர்.
பின்னர் 1949 டிசம்பர் 29-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப் படி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவிக்கப் பட்டு, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு, இரும்புகம்பிகளால் வேலி அமைக்கப் பட்டது.
ஆனால் வேலிக்கு வெளியே நின்று ராமர் சிலையை இந்துக்கள் வழிபடவும்,பூஜைகள் செய்யவும் அனுமதிக்கப் பட்டனர். ராமர் சிலைக்கு பூஜை செய்ய ஒரே ஒரு பூஜாரியை மசூதிக்குள் அனுமதிக்கவும் வழி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
பின்னர் 1992 டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் 464 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பாழடைந்த கட்டிடம் தரைமட்டமாக்கப் பட்டது.
நடைபெற்ற வரலாற்று சம்பவங்களை ஆராய்ந்தால் ராமர் கோவில் பிரச்சனை இன்று, நேற்றோ இல்லை முகலாயர் காலத்தில் ஏற்பட்டது என்று தெளிவாக தெரிகிறது.
படிப்படியான நிகழ்வுகளை சரித்திரப் பின்னணியில் நோக்கும் போது நிச்சயமாக ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் ஆலயம் எழும்பும் என்கிற நம்பிக்கை மலர்கிறது.
ஜெய் சீதாராம்.. ஜெய் ஸ்ரீ ராம்...
உங்கள்
உத்_தும்பிக்கை_நண்பன்...ன்
Thursday, November 2, 2017
ஐப்பசிபவுர்னமி_அன்னாபிஷேகம்
#ஐப்பசிபவுர்னமி_அன்னாபிஷேகம்
ஐப்பசி துலா மாதம் என்றாலே தீபாவளி, கந்த சஷ்டி, உத்தான ஏகாதசி மற்றும் துலா ஸ்நானம் தான் பலருக்கு ஞாபகம் வரும் ஆனால் மற்றும் ஒர் சிறப்பு உண்டு ஐப்பசிமாத பவுர்னமியில் வரும் அன்னாபபிஷேகம் தான்.
"கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன்".
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்
அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர்.
அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன.
இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன.
ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிஷதங்கள்.
எது கிடைத்தாலும் முதலில் இறைவனுக்கு சமர்ப்பித்து வழிபடுவதுபோல ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்ன பிரசாதம் செய்து அதை சிவனுக்கு முழுமையாக சாத்துவது இந்த வேதங்களில் ஒளிந்து உள்ள உண்மை.
சிவாலயங்களிள் நடைபெரும் அன்னாபிஷேகம்..!! நமது சனதான தர்மத்தின் படி யாரும் பசித்திருக்கக் கூடாது எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில், அன்னாபிஷேக செய்து பின் அன்னதானம்.
போதும் என மனித மனம் திருப்திஅடைவது உணவில் மட்டுமே..!!
அன்னாபிஷேகத்தை தரிசிக்கும்
வாய்ப்பு கிடைத்தவர்கள் அன்னத்துக்குக் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட மாட்டார்கள் என்பது உண்மை.
பொதுவாக பலருக்கு செல்வத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆனாலும் உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும் பசி இருக்கும் ஆனால் உண்ண முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது..!!
இப்படிப்பட்டவர்கள் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து அந்த அன்ன பிரசாதத்தை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்..!!
நீண்ட நாடளாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள்... அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும்.
அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும், தன் நம்பிக்கையும் கை வரப் பெறும்.
அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
ஒருவன் எவ்வளவு பெரிய தானதர்மங்களைச் செய்தாலும் கூட அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும்..!!
அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும் அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் நமது சனதான தர்மம் உணர்த்துகிறது..!!
நீங்களும் அருகில் உள்ள சிவ ஆலையங்களுக்கு சென்று அன்னாபிஷேகம்தில் கலந்துகொண்டு இறை அருள்பெருக வாழ்த்துக்கள்.
போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ ...
உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்
Monday, October 30, 2017
ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம்
ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோடி புண்ணியம்!
ஐப்பசி துலா மாதம் என்றாலே தீபாவளி, மற்றும் துலா ஸ்நானம் தான் பலருக்கு ஞாபகம் வரும் ஆனால் மற்றும் ஒர் சிறப்பு உண்டு ஐப்பசிமாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசி
ஆம் நாளைய தினம் 31.10.17 உத்தான ஏகாதசி.
மாதந்தோறும் வரும் ஏகாதசி விசேஷம். அதனால் இந்த ஏகாதசி நாளில் மறக்காமல் விரதமிருந்து பெருமாளை ஸேவிப்பார்கள் காரணம். இவற்றில் வருடத்தில். மூன்று ஏகாதசிகள் முக்கியத் துவம் வாய்ந்தவை என்றுபோற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்..
கைசிக ஏகாதசி,
வைகுண்ட ஏகாதசி,
உத்தான ஏகாதசி
மேற்கண்ட மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான ஏகாதசி நாட்கள் என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படுகின்றன.
விரதம் இருந்து, ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மிக சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.
நாளைய தினம் உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின் தரித்திர நிலையை மாற்றிவிடும். வீட்டில் சுபிட்சம் நிலவும். கூடுமானவரை, விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம்.
இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. காலை அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி வழிபடுங்கள். எல்லா சத்விஷயங்களும் உங்களைத் தேடி வரும்..
உத்தான ஏகாதசி நாளில், பெருமாள் கோயில் தீர்த்தத்தைப் பருகினால், அத்தனைப் புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம். மற்றும் நாளைய தினம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.
ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன நாளை விரதம் மேற்கொள்ளுங்கள்.
முக்கியமான ஒன்று ஏகாதசி நாளில் திருத்துலாய் என்று அழைக்கப்படும் துளசியை சாப்பிட வேண்டாம் என்று உபநிஷதங்களிள் குறிப்பிடப்படுகிறது
ஓம் நமோ நாராயணாய நமஹ...
உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்..
Sunday, October 29, 2017
துலா ஸ்நானம் பயணம் ஒர் சிறப்பு பார்வை
துலா ஸ்நானம் பயணம் ஒர் சிறப்பு பார்வை..
நானும் எனது நண்பர்களும் இணைந்து திட்டப்படி.
உத்தரமேரூரில் 27.10.2017 அன்று விடியற்காலை துவங்கிய பயணம்.
ஒரு யுகங்கள் கங்கையில் குளித்த பலன் பெற ஒரு நாள் இந்த துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தால் சுலபமாக பலன் கிட்டும் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.
மேலும் துலா ஸ்நானம் பற்றிய ஒர் விரிவான கட்டுரையை முகநூலில் எழுதியுள்ளேன் அதனை படிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக்செய்யவும் http://aicomps.blogspot.com/2017/10/blog-post_41.html
சுமார் மூன்றரை மணிநேர பயணத்தின் முடிவில் ஸ்ரீ ரங்கம் வந்தடைந்தோம் அம்மா மண்டபம் அருகில் காவேரி புண்ணிய நதியில் நீராடியஉடன் அன்றாட வாழ்வின் முக்கியமான நிகழ்வில் ஒன்றான நித்திய கர்மாவை முடித்து விட்டு பின்னர்.
பூலோக வைகுண்டம் என்று சொல்லிய உடன் என் நினைவில் வருகிற பாசுரம்.
(பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.)
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் சமேத ரங்கநாயகி தாயார் சன்னதியில் நண்பர்கள் உதவியுடன் மிக அற்புதமான சேவை.
என் மரியாதைக்குறிய அன்பு சகோதரர் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான வடக்கு நோக்கிய திசையில் எழுந்தருளி இருக்கும் கேட்டதை கேட்டஉடன் அள்ளித்தரும் உறையூர் கமலவல்லி நாச்சியார் திருகோவில் தரிசனம்.
திருச்சியிலிருந்து குருவாயூர் செல்லும் வழியில், திண்டுக்கலில் என் தந்தையின் நண்பர் திரு. இலங்கோவன் அவர்களுடன் ஒர் சந்திப்பு. (இவர்களின் சந்திப்பு சுமார் 30ஆண்டுகாலத்திற்கு பிறகு நடந்தது. இரு நண்பர்களின் மலரும் நினைவுகள் அவர்களை மட்டுமல்ல, எங்களையும் மகிழ்வித்தது. கண் கலங்கவும் வைத்தது)
அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் மலை கோயில் கோபுர தரிசனம். பழனியில் சிறப்பாக கருதப்படுகிற ஐயர் திருப்பூர் லாட்ஜ் என்று அழைக்கப்படும் இடத்தில் மதிய உணவு முடித்து.
என் சகோதரர் திரு.வரதன் அவர்கள் வழிகாட்டுதலின் படி ஆனைமலை மாசாணி அம்மன் சன்னதியில் மிக பிரம்மாண்ட தரிசனம் மட்டுமல்ல அம்மனும் தான்.
(ராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் காலத்தில் பராசக்தி இருப்பதாக கருதினர், இந்த பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த அருள் மழைப்பொழிவள் என்பது உண்மை. It is said that that Lord Sri Rama on His way to Lanka to rescue Mother Sita came to know that Sri Masaniamman representing Parasakti was here. He made an idol of the mother with the sand available in the crematorium and worshipped. He made it in the reclining form.)
அங்கிருந்து புறப்பட்டு சற்றும் எதிர்பாராத விதமாக அமைந்த பயணம் ஸ்ரீ பல்லச்சேனா மீன்குளத்தி அம்மன் கோயிலில் (ஒர் பக்தரின் வேண்டுதலை ஏற்ற ஸ்ரீ மதுரை மீனாட்சிஅம்மன் அந்த பக்தரின் குடையின் மீது எரி இங்கு வந்து காட்சி தந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது)
எனது நண்பன் திரு. சிவகுமார் அவர்கள் ஏற்பாட்டில் அவருடைய குலதெய்வ கோவிலில் பல்லச்சேனா மீன்குளத்தி அம்மனிடம் இரவு சிறப்பு வழிபாடு மிகவும் அற்புதமாக நடந்து முடிந்தது.
பல்லச்சேனா ஊரில் அமைந்துள்ள சிறிய உணவகத்தில் இரவு உணவு முடித்தோம்.
அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் கேரள மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்கல் மலைப்பகுதி என்பதாலும் மற்றும் 4way road's என்று அழைக்கப்படும் சாலைகள் இல்லாத காரணங்களால், எங்கள் பயணம் மிகவும் நீண்டதாக இருந்தது. இருப்பினும் நீண்ட பயணத்தின் முடிவில் குருவாயூர் வந்து அடைந்தோம். (இரவு 10.30)
மறு நாள்காலை (28.10.2017) என் மனைவியின் தோழி திருமதி. சிவகாமி சிவக்குமார் அவர்கள் உதவியுடன் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதி முன்பு நாங்கள்,
இறைவனை காண கண் கோடி வேண்டும் என்பது பழமொழி,
அது வெறும் பழமொழி இல்லை இறைவன் வாக்கு என்பதை முதல் முறையாக உணர்ந்தேன்,
சிறிதும் எதிர்பாராத விதமாக அமைந்த திவ்விய தரிசனம் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவுகள் என்பது உண்மை.
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ள வடமேற்கு திசையில் எழுந்தருளி இருக்கும் மம்மீயூர் மாதவனை (சிவ விஷ்ணு சன்னதி) தரிசனம் செய்து முடித்தால் மட்டுமே குருவாயூரப்பன் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது மகான்களின் வாக்கு.
அடுத்து மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு துனை நின்று அர்ஜுனனுக்கு தேர் ஓட்டிய பார்த்தசாரதி திருக்கோயில் அற்புதமான தரிசனம்,
அந்த கோவிலின் அமைப்பு பார்த்தால் தேர் போன்று உள்ளது அதன் நடுவில் அமர்ந்த நிலையில் கண்ணபிரான் பார்த்தசாரதியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மற்றும் ஒரு இடம் கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் குருவாயூரில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சமேத பத்மாவதி பகவதி தாயார் தரிசனம் கிடைக்க பெற்றது.
பிறகு அங்கு என் நண்பனின் ஏற்பாட்டில் மிகவும் அற்புதமான கேரள நாட்டு மறக்கமுடியாத மிகவும் சுவையான மதிய உணவை உண்டு மகிழ்ந்தோம்.
உண்ட மயக்கம் கொண்டிருக்கும் உண்டு என்பது பழமொழி சிறிதுக்கு பின் hotelலை checkout செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நாங்கள்
சுமார் 4 மணி நேர பயணத்துக்கு பின் அவினாசி வந்தடைந்தோம் அங்கு உள்ள சிவ ஸ்தலம் அருள் மிகு அவினாசி லிங்கேஷ்வரர் சமேத கருணாம்பிகை கோவில் தரிசனம் முடித்து,
சனிக்கிழமை தினமாக அமைந்தால் திருப்பூர் திருப்பதி என்று அழைக்கப்படும் வேங்கடாசலபதி கோயில் தரிசனம் கண்டு தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில்...
உத்தரமேரூரை நோக்கி...
பயணத்திற்கு உறுதுணையாக இருந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது ஆச்சார்யனுக்கு என் முதல் வணக்கங்கள்.
மற்றும் எங்கள் பயணத்துக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இருகரம் கூப்பி கோடானு கோடி நன்றிகள்.
என்றும் பயணர்கள் முடிவதில்லை தொடரும்..
உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்
குறிப்பு :- உத்தரமேரூரில் துவங்கி ஸ்ரீ ரங்கம், உறையூர், திண்டுக்கல், பழனி, ஆனைமலை, பல்லச்சேனா, குருவாயூர், அவினாசி, திருப்பூர், மீண்டும் உத்தரமேரூர் வந்தடைய எடுத்துக்கொண்டு பயணத்துக்கான நேரம் மற்றும் Distances என்று செல்லக்கூடிய கிலேமீட்டர் என்று பார்த்தால் சுமார் 1350KM , மொத்த பயணநேரம் 47 Hrs...
#NHAI #xylo #47hrs #1350kmங #mahindra_and_mahindra #driver_gopy #நண்பர்கள் #kerala_govt #mylife #facebook #புலி #CV #rajesh #kozhi #twitter #android #BSNL #AIRTEL #android_app #இளையராஜ_இசை
#ARR #Google #Googlemaps #seenu_police #hiway_hotels #a2b
Saturday, October 28, 2017
தண்ணீர்
நான் கேரளாவில் குருவாயூர் சுற்றுப்பயணம் வந்த நேரத்தில் தண்ணீர் சம்மந்தமான ஒன்றை கவனித்தேன். உணவகத்தில் ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள்.
வெளியூரிலிருந்து வந்து சொகுசா பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்கச்சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .
சரி கடைகள்தான் என்றால் முக்கியமாக கோயில் அன்னதானத்திலும் இதுதான்.
வீடுகளிலும்..... எங்கும். எதிலும்.
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை.
அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது.
குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.
இதில் அப்படி என்ன இருக்கிறது ?
# பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
# சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
# கங்களி, சீரகம், வெட்டிவேர்
மேலே குறிப்பிட்ட மூலிகைகள் முக்கியமான ஒன்று, தேவைக்கேற்ப சிலர் இன்னும் பிற மூலிகைகள் சேர்த்து கொள்கிறார்கள். இதை பருகுவதால் உடலில் ஏற்படும் உபாதையங்கள் நீங்கி, உடலை சீராக்கி சமனிலை படுத்தும் என்பது சித்தர்களின் வாக்கு.
நான் பழக்கத்தில் ஜீரோ பாக்டீரியா என்று அழைக்கப்படும் பன்னாட்டு (பெயர் குறிப்பிடாமல்) கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். அவர்களை நிச்சயமாக மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து மாநிலமான கேரளத்தின் இருக்கும் மலையாள மக்களை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? நிச்சயமாக இல்லை நாமும் பின்பற்றுவோம்...
உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்...
Friday, October 20, 2017
கந்த சஷ்டி விரதம்
கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி அதன் விளக்கம் என்ன?
அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு சமர்ப்பணம்..
அருவமும் உருவம் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு.
சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.
இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது.
சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.
சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யா மயிலாக வந்தபோது வாகனமாகவும் சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.
முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.
சிவ – பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை.
எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, ‘நான்’ என்னும் அகங்காரம் சேவலாகவும், ‘எனது’ என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகப் பெருமான்.
அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிகமுக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம்.
சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடிக்கொள்வான் என்ற பொருளும். முனிவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டிவரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.
இந்த ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம் – உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
கந்த புராணம் படிப்பது, சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது கேட்பது விசேஷம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை கொண்ட சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.
ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்
குறிப்பு : சஷ்டி விரதம் நாட்கள் இன்று 20.10.2017 முதல் 26.10.2017 வரை நடைபெறுகிறது.
#கந்த_ஷஷ்டி #சஷ்டி_விரதம் #உத்_தும்பிக்கை_நண்பன் #புலி #சிவா #உத்தரமேரூர் #அத்வைத #சைவ