நான் உத்தரமேரூரிலிருந்து மெட்ராஸ்க்கு (சென்னை) frequentஆக சென்று வருவது வழக்கம்.
அப்படி சென்று வரும்போது வழியில் புதிது புதிதாக தேடிப்பிடித்து உணவு உண்ணுவது வழக்கம். அதேசமயம் வழியில் உள்ள அனைத்து சைவ உணவகத்திலும் சாப்பிட்ட பல அனுபவங்கள் உள்ளது.
நானும் புதிய அனுபவத்திற்காக புதியதாக துவக்கியுள்ள
கூடுவாஞ்சேரி GST சாலையில் அமைந்துள்ள சுந்தரா சைவ உணவகத்தில் உணவு அருந்தலாம் என்று நினைத்து அங்கு சென்றேன். (வெளித்தோற்றமே வா, வா என கூப்பிடும் கலை உணர்வோடு உள்ளது.)
உள்ளே சென்று பார்த்தால் உள் தோற்றம் (Beautiful ambiance)
அதைவிட அதி அற்புதம்.
நான் அங்கே உணவு உண்ட அனுபவமே தனி என்று சொன்னால் அது மிகையாகாது.
முதலில் உணவின் சுவை பற்றி பார்ப்போம்.
நான் பொதுவாக எந்த உணவகத்திற்கு சென்றாலும் தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்றான நம் இட்லி, வடை, மற்றும் பொங்கல் சுவைப்பது வழக்கம்.
அதை அப்படியே ஆர்டர் செய்தேன்.
ஆர்டர் செய்து 3நிமிடம் மட்டும் காத்திருந்தேன். அதற்குள் சுடச்சுட தயார் செய்து கொண்டு tableலுக்கு வந்துவிட்டது.
அதன் சுவையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லில்லடங்காது, (சாம்பார், சட்டினி என்று அனைத்து உணவு பண்டங்களின் சுவையும் அருமை) அவைகளை உண்ட பின்னர் அந்த வைட்டரிடம் உங்கள் உணவகத்தில் என்ன special என்று கேட்டதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் அனைத்தும் special என்று விளக்கிக் கூறினார்.
எங்கள் நிறுவனத்தில் நாங்கள் 15 வருட அனுபவம் உள்ள பணியாளர்களை கொண்டு பணி செய்கிறாம்.
அது மட்டுமல்ல சோடா உப்பு, சீன உப்பு ஆகியவற்றை அறவே பயன்படுத்துவது இல்லை.
நாங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் மிகவும் கவனமாகவும், தரமாக உள்ளதாகவும் வாங்குகிறோம் மேலும் தண்ணீரி்லும் தனி கவனம் செலுத்துகிறோம் என்று இரண்டு நிமிடத்திற்குள் விரிவாக விளக்கம் அளித்தார்.
மேலும் அவர் எங்கள் மைசூர் தோசை மற்றும் புரோட்டா சாப்பிடுங்கள் என்று கூறினார்.
உடனடியாக புரோட்டாவா என்று நானும் எனது நண்பர் சிவாவும் அலறினோம், அதர்க்கு அவர் மெதுவாக எங்கள் உணவகத்தில் சுவைத்து பாருங்கள் என்று அன்பாக கூறினார்.
நாங்களும் எடுத்து வாருங்கல் என்று சொல்லிவிட்டோம். (ஆனால் மனதில் ஒரு பயம் எப்படி இருக்குமோ என்று)
அதுவும் சூடாக வந்தது.
நான் என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஓர் புரேட்டாவை உண்டதே கிடையாது. ஏன் என்றால் அப்படி ஓர் மென்மை மற்றும் சுவை.
என் நண்பன் அந்த புரேட்டாவின் மென்மைக்கு காரணம் முட்டை கலந்து இருப்பார்கள் என்று அவருக்கே உண்டான நகைச்சுவை பாணில் கிண்டலாக கூறினான். அதை சற்றும் எதிர்பாராத வைட்டர் சற்றும் தாமதிக்காமல் இந்த உணவகம் சுத்தமான சைவம் என்று கூறினார்.
அந்த வைட்டர் மீண்டும் வந்து எப்படி இருந்தது என்று கேட்டார் அதற்குள் மற்ற நண்பர்கள் எனக்கு ஒன்று, எனக்கு ஒன்று, என்று மேலும் மேலும் ஆர்டர் செய்தார்கள்.
வைட்டர் எங்களிடத்தில் காஃபி, டீ, மற்றும் ஜுஸ் உண்டு எது வேண்டும் என்று கேட்க, நாங்கள் ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்து பருகினோம். அதில் டீயின் சுவை மிகவும் அருமை (அதற்காக மற்ற உணவை குறைத்து எடை போட முடியாது) குடித்தால் மட்டுமே தெரியும்.
அந்த வைட்டர் எங்களிடம் நிறுவனத்தின் உரிமையாளர் திரு அழகிரி அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் (எனக்கு உடனடியாக மதுரை மு.க.அழகிரி நினைவிற்கு வந்தார்) நாங்களும் அவரிடத்தில் பேசியபோது மேலும் அவர் அங்குள்ள 500 நபர்கள் அமரக்குடிய பார்டி ஆள் (party hall) மற்றும் வசதிகளையும் விரிவாக விளக்கினார். சுத்தமான கழிப்பறை, பெரிய கார் பார்க்கிங் வசதி, நல்ல குளிர்சாதன வசதி என்று கூறி கொண்டே போனார்..
மேலும் அவரிடம் இருந்து அன்பான வரவேற்பு மற்றும் ஊபச்சரிப்பு அவர்களின் தனித்தன்மை காட்டுகிறது.
அதற்குள் நள்ளிரவு மணி 12.00 ஆகிவிட்டது என்பதை என் கை கடிகாரம் காட்டியது.
நாங்களும் புறப்படும் நேரம் வந்துவிட்டது என்று மீண்டும் ஒர் முறை சந்திப்போம் என்று சொல்லி கிளம்பி விட்டோம்.
ஏன் நீங்களும் ஒரு முறை சுவைத்து பார்க்க கூடாது.
நல்ல அனுபவத்துடன்
உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்.
குறிப்பு
#xylo #mahindra #siva #சிவா #puli #புலி #சிவகுமார் #guduvanchery #உத்.தும்பிக்கைநண்பன் #வழ்த்துக்கள் #Sundara #hotel
http://www.hotelsundara.in
No comments:
Post a Comment