Saturday, September 30, 2017

முதியோர் தின வாழ்த்துக்கள்..

அன்பில் முதிர்ந்தவர்கள்
அறிவில் முதிர்ந்தவர்கள் 
பக்தியில் முதிர்ந்தவர்கள்
பண்பில் முதிர்ந்தவர்கள்
சாதனையில் முதிர்ந்தவர்கள்

முதிர்ந்த மரங்கள்தான் பலன் தரும்

முதியோரை ஒதுக்காமல் 
அன்பாய் அரவணைப்போம் !!!

தலைவணங்கி முதியோர் தின வாழ்த்துக்கள்..

உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்

Friday, September 22, 2017

விடை விளங்கா மூதாட்டி....

விடை விளங்கா மூதாட்டி..

வீரத்தின் அடையாமாக
விளங்கும் நெல்லை மாவட்டம் #ஆலங்குளம் கிராமத்தில் #SBI வங்கியில் வரிசையில் ஒர் 75 வயது  மூதாட்டி #OAP அக்கவுண்டில் பென்சன் பணம் 1000/- ரூபாயில் மினி்மம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் 350/- அபராதம் பிடிக்கபட்டு மீதம் 650/- தருகிறார்கள்.
அந்த மூதாட்டிக்கு 3000/- மினிமம் பேலன்ஸ் என்றால் என்னவென்று கடைசி வரை புரியவில்லை, மூதாட்டி கண்ணிரோடு வெளியே போனதை பார்க்கும் போது மனதை பிசைந்தது (இது பல செய்திகளில் வந்தது)

இது அந்த ஒரு வங்கியில் மட்டுமா ? இல்லை. நாம் தேசம் முழுவதும் இதே நிலை தான் பாமரனுக்கும், படித்த கீழ்த்தட்டு மக்களுக்கும்..

என்ன தேசம் இது. படித்த corporate முதலாளிகள் எப்போதும் எதாவது பெயரில் யார்? எவர், என்று பாராமல் இந்த தேசத்தை சுரண்டி கொண்டு இருக்கின்றனர்...

இதை எல்லாம் வேடிக்கை பார்த்தும் நாம் எதுவும் செய்யாமல் இருப்பது. நமக்கும் ஐந்து அறிவு பிராணிகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும் ஓநாய்கள் இவர்கள் என்று எண்ணம் தோன்றுகிறது.

இது போன்ற நாட்டு உடமை ஆக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளை  (corporate bank)  மிஞ்சும் அளவிலற்கு செயல்படுகின்றது.

மூதாட்டின் சுருக்கு பையில் இருந்து பணத்தை திருடுவது தான் உங்கள் - புதிய இந்தியா வா? என்று எண்ணம் தோன்றுகிறது.

மேலே உள்ள எழுத்து சிகப்பு சட்டை அடையாளம் என்று எண்ண வேண்டாம். அதன்பாள் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

அதர்க்காக நான் பகுத்தறிவு பக்கமா.. இல்லை இல்லவேயில்லை.

வாருங்கள் அந்த மூதாட்டிக்கு விடை கொடுப்பேரம்..

இதற்கு தான் மத்திய அரசு அனைத்து வங்கிலும் ஜீரோ பாலன்ஸ்  அடிப்படை சேமிக்கு கணக்கு (ஜன்தன் கணக்கு) என்று ஒன்று கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டம், பொது மற்றும் தனியார் வங்கிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...

ஆம் அந்த மூதாட்டியின் வங்கி கணக்கை மேற்ச்சொன்ன அடிப்படை சேமிப்புக்கணக்குக்கு மாற்றி அமைத்து விடலாம்.
#ஆலங்குளம் கிராமம் போல்
தேசம் முழுவதும்  நிறைந்துள்ள  பல கிராம  மக்களுக்காக மாற்றங்கள் காண விரைந்திடுவோம்..

நம் தேசம் செழிக்க.. வளர்க்க...பாடுபடும்

உங்கள
உத். தும்பிக்கை நண்பன்.

#sbi #மூதாட்டி

வேலன் ரதமே மீள்ளாய்... மீள் ரதமே மீள்.

வேலன் ரதமே மீள்ளாய்...
மீள் ரதமே மீள்.

மயிலன் ரதமே உருகுலைந்து கிடக்கிறது....

வாழ்ந்து கெட்ட மனிதனைப்போல குறுகி, குமைந்து, கிடக்கிறது...

எந்த வீதியில் ஒய்யாரமாக ஓடியதோ அதே வீதியில் ஓரமாய், போவோர் வருவோரைப் பார்த்த வண்ணம் இருக்கிறது...

பல நூறு கைகள் சேர்ந்து, தொட்டு இழுத்த வடம் கோவிலுக்குள் தொட ஆளில்லாமல் சுருண்டு கிடக்கிறது...

விறகாகிப்போன தேரின் அருகில் சென்று காது கொடுத்து கேட்டால் வாழ்வின் நிலையாமையை  சொல்லிக்கொண்டிருக்கிறது.

தொட்டுப் பாரத்து வந்தேன்... ஜென்மாந்திர உறவின் பந்தம் தெரிந்தது....

நம் தலைமுறை வடம் பிடிப்போம்..

உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்..