Monday, October 30, 2017

ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம்

ஐப்பசி உத்தான ஏகாதசி விரதம் இருந்தால் கோடி புண்ணியம்!

ஐப்பசி துலா மாதம் என்றாலே தீபாவளி, மற்றும் துலா ஸ்நானம் தான் பலருக்கு ஞாபகம் வரும் ஆனால் மற்றும் ஒர் சிறப்பு உண்டு ஐப்பசிமாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசி

ஆம் நாளைய தினம் 31.10.17 உத்தான ஏகாதசி.

மாதந்தோறும் வரும் ஏகாதசி விசேஷம். அதனால் இந்த ஏகாதசி நாளில் மறக்காமல் விரதமிருந்து பெருமாளை ஸேவிப்பார்கள் காரணம். இவற்றில் வருடத்தில். மூன்று ஏகாதசிகள் முக்கியத் துவம் வாய்ந்தவை என்றுபோற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்..

கைசிக ஏகாதசி,
வைகுண்ட ஏகாதசி,
உத்தான ஏகாதசி

மேற்கண்ட மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான ஏகாதசி நாட்கள் என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படுகின்றன.

விரதம் இருந்து, ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மிக சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.

நாளைய தினம் உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின் தரித்திர நிலையை மாற்றிவிடும். வீட்டில் சுபிட்சம் நிலவும். கூடுமானவரை, விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம்.

இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. காலை அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாத்தி வழிபடுங்கள். எல்லா சத்விஷயங்களும் உங்களைத் தேடி வரும்..

உத்தான ஏகாதசி நாளில், பெருமாள் கோயில் தீர்த்தத்தைப் பருகினால், அத்தனைப் புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம். மற்றும் நாளைய தினம் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.

ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன நாளை விரதம் மேற்கொள்ளுங்கள்.

முக்கியமான ஒன்று ஏகாதசி நாளில் திருத்துலாய் என்று அழைக்கப்படும் துளசியை சாப்பிட வேண்டாம் என்று உபநிஷதங்களிள் குறிப்பிடப்படுகிறது

ஓம் நமோ நாராயணாய நமஹ...

உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்..

Sunday, October 29, 2017

துலா ஸ்நானம் பயணம் ஒர் சிறப்பு பார்வை

துலா ஸ்நானம் பயணம் ஒர் சிறப்பு பார்வை..

நானும் எனது நண்பர்களும் இணைந்து திட்டப்படி.

உத்தரமேரூரில் 27.10.2017 அன்று விடியற்காலை துவங்கிய பயணம்.

ஒரு யுகங்கள் கங்கையில் குளித்த பலன் பெற ஒரு நாள் இந்த துலா மாதத்தில் காவேரியில்  ஸ்நானம் செய்தால் சுலபமாக பலன் கிட்டும் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.

மேலும் துலா ஸ்நானம் பற்றிய ஒர் விரிவான கட்டுரையை முகநூலில் எழுதியுள்ளேன் அதனை படிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக்செய்யவும் http://aicomps.blogspot.com/2017/10/blog-post_41.html

சுமார் மூன்றரை மணிநேர பயணத்தின் முடிவில் ஸ்ரீ ரங்கம் வந்தடைந்தோம் அம்மா மண்டபம் அருகில் காவேரி புண்ணிய நதியில் நீராடியஉடன் அன்றாட வாழ்வின் முக்கியமான நிகழ்வில் ஒன்றான நித்திய கர்மாவை முடித்து விட்டு பின்னர்.

பூலோக வைகுண்டம் என்று சொல்லிய உடன் என் நினைவில் வருகிற பாசுரம்.

(பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.)

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் சமேத ரங்கநாயகி தாயார் சன்னதியில் நண்பர்கள் உதவியுடன் மிக அற்புதமான சேவை.

என் மரியாதைக்குறிய அன்பு  சகோதரர் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான வடக்கு நோக்கிய திசையில் எழுந்தருளி இருக்கும் கேட்டதை கேட்டஉடன் அள்ளித்தரும் உறையூர் கமலவல்லி நாச்சியார் திருகோவில் தரிசனம்.

திருச்சியிலிருந்து குருவாயூர் செல்லும் வழியில், திண்டுக்கலில் என் தந்தையின்  நண்பர் திரு. இலங்கோவன் அவர்களுடன் ஒர் சந்திப்பு. (இவர்களின் சந்திப்பு சுமார் 30ஆண்டுகாலத்திற்கு பிறகு நடந்தது. இரு நண்பர்களின் மலரும் நினைவுகள் அவர்களை மட்டுமல்ல, எங்களையும் மகிழ்வித்தது. கண் கலங்கவும் வைத்தது)

அங்கிருந்து புறப்பட்டு வரும் வழியில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் மலை கோயில் கோபுர தரிசனம். பழனியில் சிறப்பாக கருதப்படுகிற ஐயர் திருப்பூர் லாட்ஜ் என்று அழைக்கப்படும் இடத்தில் மதிய உணவு முடித்து.

என் சகோதரர் திரு.வரதன் அவர்கள் வழிகாட்டுதலின் படி ஆனைமலை மாசாணி அம்மன் சன்னதியில் மிக பிரம்மாண்ட தரிசனம் மட்டுமல்ல அம்மனும் தான்.

(ராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் காலத்தில் பராசக்தி இருப்பதாக கருதினர், இந்த பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த அருள் மழைப்பொழிவள் என்பது உண்மை. It is said that that Lord Sri Rama on His way to Lanka to rescue Mother Sita came to know that Sri Masaniamman representing Parasakti was here. He made an idol of the mother with the sand available in the crematorium and worshipped. He made it in the reclining form.)

அங்கிருந்து புறப்பட்டு சற்றும் எதிர்பாராத விதமாக அமைந்த பயணம் ஸ்ரீ பல்லச்சேனா மீன்குளத்தி அம்மன் கோயிலில் (ஒர் பக்தரின் வேண்டுதலை ஏற்ற ஸ்ரீ மதுரை மீனாட்சிஅம்மன் அந்த பக்தரின் குடையின் மீது எரி இங்கு வந்து காட்சி தந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது)

எனது நண்பன் திரு. சிவகுமார் அவர்கள் ஏற்பாட்டில் அவருடைய குலதெய்வ கோவிலில் பல்லச்சேனா மீன்குளத்தி அம்மனிடம் இரவு சிறப்பு வழிபாடு மிகவும் அற்புதமாக நடந்து முடிந்தது.

பல்லச்சேனா ஊரில் அமைந்துள்ள சிறிய உணவகத்தில் இரவு உணவு முடித்தோம்.

அங்கிருந்து புறப்பட்டு  நாங்கள்  கேரள மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்கல் மலைப்பகுதி என்பதாலும் மற்றும் 4way road's என்று அழைக்கப்படும் சாலைகள் இல்லாத காரணங்களால், எங்கள் பயணம் மிகவும் நீண்டதாக இருந்தது. இருப்பினும் நீண்ட பயணத்தின் முடிவில் குருவாயூர் வந்து அடைந்தோம். (இரவு 10.30)

மறு நாள்காலை (28.10.2017) என் மனைவியின் தோழி திருமதி. சிவகாமி சிவக்குமார் அவர்கள் உதவியுடன் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதி முன்பு நாங்கள்,

இறைவனை காண கண் கோடி வேண்டும் என்பது பழமொழி,
அது வெறும் பழமொழி இல்லை இறைவன் வாக்கு என்பதை முதல் முறையாக உணர்ந்தேன்,

சிறிதும் எதிர்பாராத விதமாக அமைந்த திவ்விய தரிசனம் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவுகள் என்பது உண்மை.

குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ள வடமேற்கு திசையில் எழுந்தருளி இருக்கும் மம்மீயூர் மாதவனை (சிவ விஷ்ணு சன்னதி) தரிசனம் செய்து முடித்தால் மட்டுமே குருவாயூரப்பன் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது மகான்களின் வாக்கு.

அடுத்து மகாபாரதத்தில் பஞ்ச  பாண்டவர்களுக்கு துனை நின்று அர்ஜுனனுக்கு தேர்  ஓட்டிய பார்த்தசாரதி திருக்கோயில் அற்புதமான தரிசனம்,

அந்த கோவிலின் அமைப்பு பார்த்தால் தேர் போன்று உள்ளது அதன் நடுவில் அமர்ந்த நிலையில் கண்ணபிரான் பார்த்தசாரதியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மற்றும் ஒரு இடம் கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் குருவாயூரில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சமேத பத்மாவதி பகவதி தாயார் தரிசனம் கிடைக்க பெற்றது.

பிறகு அங்கு என் நண்பனின் ஏற்பாட்டில் மிகவும் அற்புதமான கேரள நாட்டு மறக்கமுடியாத மிகவும் சுவையான மதிய உணவை உண்டு மகிழ்ந்தோம்.

உண்ட மயக்கம் கொண்டிருக்கும் உண்டு என்பது பழமொழி சிறிதுக்கு பின் hotelலை checkout செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நாங்கள்

சுமார் 4 மணி நேர பயணத்துக்கு பின் அவினாசி வந்தடைந்தோம் அங்கு உள்ள சிவ ஸ்தலம் அருள் மிகு அவினாசி லிங்கேஷ்வரர் சமேத கருணாம்பிகை  கோவில் தரிசனம் முடித்து,

சனிக்கிழமை தினமாக அமைந்தால் திருப்பூர் திருப்பதி என்று அழைக்கப்படும் வேங்கடாசலபதி கோயில் தரிசனம் கண்டு தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில்...

உத்தரமேரூரை நோக்கி...

பயணத்திற்கு உறுதுணையாக இருந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது ஆச்சார்யனுக்கு என் முதல் வணக்கங்கள்.

மற்றும் எங்கள் பயணத்துக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக உதவிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இருகரம் கூப்பி கோடானு கோடி நன்றிகள்.

என்றும் பயணர்கள் முடிவதில்லை தொடரும்..

உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்

குறிப்பு :- உத்தரமேரூரில் துவங்கி ஸ்ரீ ரங்கம், உறையூர், திண்டுக்கல், பழனி, ஆனைமலை, பல்லச்சேனா, குருவாயூர், அவினாசி, திருப்பூர், மீண்டும் உத்தரமேரூர் வந்தடைய எடுத்துக்கொண்டு பயணத்துக்கான நேரம் மற்றும் Distances என்று செல்லக்கூடிய கிலேமீட்டர் என்று பார்த்தால் சுமார் 1350KM , மொத்த  பயணநேரம் 47 Hrs...

#NHAI #xylo #47hrs #1350kmங #mahindra_and_mahindra #driver_gopy  #நண்பர்கள் #kerala_govt #mylife #facebook #புலி #CV #rajesh #kozhi #twitter #android #BSNL #AIRTEL #android_app #இளையராஜ_இசை
#ARR #Google #Googlemaps #seenu_police #hiway_hotels #a2b

Saturday, October 28, 2017

தண்ணீர்

நான் கேரளாவில் குருவாயூர் சுற்றுப்பயணம் வந்த நேரத்தில் தண்ணீர் சம்மந்தமான ஒன்றை கவனித்தேன். உணவகத்தில்  ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள்.

வெளியூரிலிருந்து வந்து சொகுசா பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்கச்சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .

சரி கடைகள்தான் என்றால் முக்கியமாக கோயில் அன்னதானத்திலும் இதுதான்.

வீடுகளிலும்..... எங்கும். எதிலும்.
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை.

அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது.

குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..

சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.

இதில் அப்படி என்ன இருக்கிறது ?

# பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)

# சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.

# கங்களி, சீரகம், வெட்டிவேர்

மேலே குறிப்பிட்ட மூலிகைகள் முக்கியமான ஒன்று, தேவைக்கேற்ப சிலர் இன்னும் பிற மூலிகைகள் சேர்த்து கொள்கிறார்கள். இதை பருகுவதால் உடலில் ஏற்படும் உபாதையங்கள் நீங்கி, உடலை சீராக்கி சமனிலை படுத்தும் என்பது சித்தர்களின் வாக்கு.

நான் பழக்கத்தில் ஜீரோ பாக்டீரியா என்று அழைக்கப்படும் பன்னாட்டு (பெயர் குறிப்பிடாமல்) கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். அவர்களை நிச்சயமாக மெச்ச வேண்டும்.

எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து மாநிலமான கேரளத்தின் இருக்கும் மலையாள மக்களை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ?  நிச்சயமாக இல்லை நாமும் பின்பற்றுவோம்...

உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்...

Friday, October 20, 2017

கந்த சஷ்டி விரதம்

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி அதன் விளக்கம் என்ன?

அன்புள்ளம் கொண்ட  நண்பர்களுக்கு சமர்ப்பணம்..

அருவமும் உருவம் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்     
பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு.

சரவணப்பொய்கையில் முருகனாய் அவதரித்த சிவபாலனுக்கு ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி உகந்த நாள்.

இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி இன்னும் இன்னும் சிறப்பு பெறுகிறது.
சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.

சூரபத்மனை முருகப் பெருமான் முற்றிலும் வதம் செய்யா மயிலாக வந்தபோது  வாகனமாகவும் சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.

முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.

சிவ – பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை. 

எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, ‘நான்’ என்னும் அகங்காரம் சேவலாகவும், ‘எனது’ என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகப் பெருமான்.

அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிகமுக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம்.

சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடிக்கொள்வான் என்ற பொருளும். முனிவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டிவரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

இந்த ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.

அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம் – உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது.

ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.

வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

கந்த புராணம் படிப்பது, சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது கேட்பது விசேஷம்.

மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை கொண்ட சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

ஆறு ஆண்டுகள் முறைப்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் அருளும் பொருளும் கிடைத்து ஞானத்துடனும் யோகத்துடனும் வாழலாம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்

குறிப்பு : சஷ்டி விரதம் நாட்கள் இன்று  20.10.2017 முதல் 26.10.2017 வரை நடைபெறுகிறது.

#கந்த_ஷஷ்டி #சஷ்டி_விரதம் #உத்_தும்பிக்கை_நண்பன் #புலி #சிவா #உத்தரமேரூர் #அத்வைத #சைவ

Thursday, October 19, 2017

காவேரி துலா ஸ்நானம் பற்றி ஒர் பார்வை

காவேரி துலா ஸ்நானம் பற்றி ஒர் பார்வை

தமிழ் பஞ்சாங்கம் படி ஒவ்வொரு மாதத்தையும் நாம் பண்டைய தமிழர்கள் ஒவ்வொரு ராசியாக கணக்கிட்டு மாதம் ஒர் ராசியாக பிரித்தனர் அதன் படி ஐப்பசி மாதத்தை துலா மாதமாக கொண்டாடுகிறோம்.

இந்த வருடம் 18.10.2017  முதல் 16.11.2017 வரை ( ஐப்பசி மாதம் 30 நாட்கள்) ஐப்பசி மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தல் உத்தமம்.

இந்த மாதத்தில் 63 கோடி புண்ய தீர்த்தங்கள் 14 லோகத்தில் இருந்து இந்த பூலோகத்தில் காவிரியில் கலந்து விடுவதாக ஐதீகம்.

தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பாபங்கள் அனைத்தும் இந்த காவேரியில் ஸ்நானம் செய்யும் போது விடுபடுவதாக மஹான்கள் வாக்கு.

காலை சூர்ய உதயத்திற்கு முன்பு ப்ரஹ்ம முகூர்த்தத்தில் ஸ்நானம் செய்தல் மஹா உத்தமமாக கருதப்படுகிறது.

துலா மாதத்தில் காவேரியில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம்  தங்கக்குடத்தில் யானை மீது எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.

துலா மாதத்தில் கங்கை தன்னிடம் சேரும் பாபங்களை போக்கிக் கொள்ள கர்நாடகாவில் உள்ள (தக்ஷிணகங்கா)  ப்ரஹ்மகிரி மலையடிவாரத்தில் இருந்து நம் தமிழ்நாட்டில் காவேரியில் வந்து கலப்பதால் இந்த துலா ஸ்நானம் மிகவும் விசேஷம்.

அது மட்டுமல்ல 1 யுகங்கள் கங்கையில் குளித்த பலன் பெற ஒரு நாள் இந்த துலா மாதத்தில் காவேரியில்  ஸ்நானம் செய்தால் சுலபமாக பலன் கிட்டும் என்பது ஆச்சார்யர்களின் வாக்கு.

ஸ்நானம் முடித்தவுடன் அவரவர்கள் யதா சக்திக்கு தக்கவாறு தானங்கள் செய்தால் தான் ஸ்நானம் பண்ண பலன் பண் மடங்குக்கிட்டும். 

இந்த ஆண்டு நம் காவேரியில் 144 ஆண்டுக்கு ஒர் முறை வரும் மஹா புஷ்கரம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதை மேலும் விசேஷமாக சொல்லலாம்.

ஆகவே பக்த அன்பர்கள் அனைவரும் இந்த துலா மாதத்தில் ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கன் அருள் பெற வேண்டும்..

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..

உங்கள்
உத் தும்பிக்கை நண்பன்

மெர்சல் விமர்சனம்! சரக்கு தீர்ந்த அட்லீ!

மெர்சல் விமர்சனம்! சரக்கு தீர்ந்த அட்லீ!

ஆனால்...? விஜய் ஜோசப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்...

இந்த படத்தில் இருவருக்கு Winner டைட்டில் கொடுக்கலாம். ஒன்று Triple தளபதி Vijay joseph நடிப்பு மற்றும் style மிகவும் அருமை.

அதற்கு அடுத்த இடத்தில் Nithya Menen  கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்து மனதில் இடம் பிடித்து விட்டார்.

படத்திற்கு Runner up மார்க் இவர்களுக்கு SJ. Surya, Stunt Master Anal Arasu.

படத்தின் Loser டைட்டிலை Atlee பெற்று இருக்கிறார்...

திரைக்கதை வச்சி எப்படிப்பட்ட பழைய படத்தையும் நல்லா எடுக்கலாம் என்பதர்க்கு அவர் குருநாதர் ஷங்கர் ஒர் சிறந்த உதாரணம்.

ஆனால் பல பழைய படத்தை வச்சி எடுத்து இந்த அளவு மொக்க பண்ணிருக்க வேண்டாம்.

மற்றும் வடிவேலு கதாப்பாத்திரம் அவ்வளவு பெரியதாக சொல்லும் அளவர்க்கு இல்லை..

Verdict என்று சொல் வேண்டும்னா Good

முக்கியமான மக்கள் பிரச்சனைக்குரிய லைன் படத்தில் இருப்பதால் ஒர் முறை பார்க்கலாம்.

பொதுவாக Vijay joseph படங்களில்  பாடல்கள் எப்போதும் ஒர் மெர்சலாக இருக்கும் இது இந்த படத்தில் ஏற்றும்...

இனி அட்லீயை கண்டால் ஓடவும்.....

குறிப்பு : Theater டிக்கெட் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது என்றே நிச்சயமாக சொல் வோண்டும்.

சராசரியாக 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சுமார் ரூ1700/- ஆகியறது.

டிக்கெட் விலை ஒருவருக்கு 205*4 (ஆனால் பாக்கி சில்லறை ரூ5 மீதி தருவது இல்லை) ரூ840 + car petrol ரூ400 + குறைந்த பட்சமாக parking கட்டணம் ரூ50 + (திரையரங்குகளில் எல்லா உணவு பொருட்களின் விலையும் 3மடங்கு அதிகம்) உணவு பொருட்கள் விலை ரூ400

உங்கள்
உத் தும்பிக்கைநண்பன்

Tuesday, October 17, 2017

பரம்பொருளே! பரம்பொருளே!!

பரம்பொருளே! பரம்பொருளே!!

உன்னை சரணடைந்தேன் பரம்பொருளே.!

அறியாமை என் கண்கள் மூடியதே பரம்பொருளே.!

அறிவின் கண் திறந்திடுவாய் பரம்பொருளே!

கரைகிறேன் என்னுள்ளே பரம்பொருளே.!

கறை கலைந்து, கரை சேர்க்க சரண் அடைந்தேன் பரம்பொருளே..!

என்னுள் இருக்கும் இருளை அகற்றிடுவாய் பரம்பொருளே..!

என்றென்றும் ஒளி தருவாய் பரம்பொருளே..!

இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன்

உங்கள்
உத் தும்பிக்கைநண்பன்

Sunday, October 15, 2017

சுந்தரா சைவ உணவகம்

நான் உத்தரமேரூரிலிருந்து மெட்ராஸ்க்கு (சென்னை) frequentஆக சென்று வருவது வழக்கம்.

அப்படி சென்று வரும்போது வழியில் புதிது புதிதாக தேடிப்பிடித்து உணவு உண்ணுவது வழக்கம். அதேசமயம் வழியில் உள்ள அனைத்து சைவ உணவகத்திலும் சாப்பிட்ட பல அனுபவங்கள் உள்ளது.

நானும் புதிய அனுபவத்திற்காக புதியதாக துவக்கியுள்ள
கூடுவாஞ்சேரி GST  சாலையில் அமைந்துள்ள சுந்தரா சைவ உணவகத்தில் உணவு அருந்தலாம் என்று நினைத்து அங்கு சென்றேன். (வெளித்தோற்றமே வா, வா என கூப்பிடும் கலை உணர்வோடு உள்ளது.)

உள்ளே சென்று பார்த்தால் உள் தோற்றம்  (Beautiful ambiance)
அதைவிட அதி அற்புதம்.

நான் அங்கே உணவு உண்ட அனுபவமே தனி என்று சொன்னால் அது மிகையாகாது.

முதலில் உணவின் சுவை பற்றி பார்ப்போம்.

நான் பொதுவாக எந்த உணவகத்திற்கு சென்றாலும் தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்றான நம் இட்லி, வடை, மற்றும் பொங்கல் சுவைப்பது வழக்கம்.
அதை அப்படியே ஆர்டர் செய்தேன்.

ஆர்டர் செய்து 3நிமிடம் மட்டும் காத்திருந்தேன். அதற்குள் சுடச்சுட தயார் செய்து கொண்டு tableலுக்கு வந்துவிட்டது.

அதன் சுவையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லில்லடங்காது, (சாம்பார், சட்டினி என்று அனைத்து உணவு பண்டங்களின் சுவையும் அருமை) அவைகளை உண்ட பின்னர் அந்த வைட்டரிடம் உங்கள் உணவகத்தில் என்ன special  என்று கேட்டதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் அனைத்தும் special  என்று விளக்கிக் கூறினார்.

எங்கள் நிறுவனத்தில் நாங்கள் 15 வருட அனுபவம் உள்ள பணியாளர்களை கொண்டு பணி செய்கிறாம்.

அது மட்டுமல்ல சோடா உப்பு, சீன உப்பு ஆகியவற்றை அறவே பயன்படுத்துவது இல்லை.

நாங்கள் வாங்கும் பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் மிகவும் கவனமாகவும், தரமாக உள்ளதாகவும் வாங்குகிறோம் மேலும் தண்ணீரி்லும் தனி கவனம் செலுத்துகிறோம் என்று இரண்டு நிமிடத்திற்குள் விரிவாக விளக்கம் அளித்தார்.

மேலும் அவர் எங்கள் மைசூர் தோசை மற்றும்  புரோட்டா சாப்பிடுங்கள் என்று கூறினார்.

உடனடியாக புரோட்டாவா என்று நானும் எனது நண்பர் சிவாவும் அலறினோம், அதர்க்கு அவர் மெதுவாக எங்கள் உணவகத்தில் சுவைத்து பாருங்கள் என்று அன்பாக கூறினார்.

நாங்களும் எடுத்து வாருங்கல் என்று சொல்லிவிட்டோம். (ஆனால் மனதில் ஒரு பயம் எப்படி இருக்குமோ என்று)
அதுவும் சூடாக வந்தது.

நான் என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஓர் புரேட்டாவை உண்டதே கிடையாது. ஏன் என்றால் அப்படி ஓர் மென்மை மற்றும் சுவை.

என் நண்பன் அந்த புரேட்டாவின் மென்மைக்கு காரணம் முட்டை கலந்து இருப்பார்கள் என்று அவருக்கே உண்டான நகைச்சுவை பாணில் கிண்டலாக கூறினான். அதை சற்றும் எதிர்பாராத வைட்டர் சற்றும் தாமதிக்காமல் இந்த உணவகம் சுத்தமான சைவம் என்று கூறினார்.

அந்த வைட்டர் மீண்டும் வந்து எப்படி இருந்தது என்று கேட்டார் அதற்குள் மற்ற நண்பர்கள் எனக்கு ஒன்று, எனக்கு ஒன்று, என்று மேலும் மேலும் ஆர்டர் செய்தார்கள்.

வைட்டர் எங்களிடத்தில் காஃபி, டீ, மற்றும் ஜுஸ் உண்டு எது வேண்டும் என்று கேட்க, நாங்கள் ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்து பருகினோம். அதில் டீயின் சுவை மிகவும் அருமை (அதற்காக மற்ற உணவை குறைத்து எடை போட முடியாது) குடித்தால் மட்டுமே தெரியும்.

அந்த வைட்டர் எங்களிடம் நிறுவனத்தின் உரிமையாளர் திரு அழகிரி அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் (எனக்கு உடனடியாக மதுரை மு.க.அழகிரி நினைவிற்கு வந்தார்) நாங்களும் அவரிடத்தில் பேசியபோது மேலும் அவர் அங்குள்ள 500 நபர்கள் அமரக்குடிய பார்டி ஆள் (party hall) மற்றும் வசதிகளையும் விரிவாக விளக்கினார். சுத்தமான கழிப்பறை, பெரிய கார் பார்க்கிங் வசதி, நல்ல குளிர்சாதன வசதி என்று கூறி கொண்டே போனார்..

மேலும் அவரிடம் இருந்து அன்பான வரவேற்பு மற்றும் ஊபச்சரிப்பு அவர்களின் தனித்தன்மை காட்டுகிறது.

அதற்குள் நள்ளிரவு மணி 12.00 ஆகிவிட்டது என்பதை என் கை கடிகாரம் காட்டியது.

நாங்களும் புறப்படும் நேரம் வந்துவிட்டது என்று மீண்டும் ஒர் முறை சந்திப்போம் என்று சொல்லி கிளம்பி விட்டோம்.

ஏன் நீங்களும் ஒரு முறை சுவைத்து பார்க்க கூடாது.

நல்ல அனுபவத்துடன்

உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்.

குறிப்பு
#xylo #mahindra #siva #சிவா #puli #புலி #சிவகுமார் #guduvanchery #உத்.தும்பிக்கைநண்பன் #வழ்த்துக்கள் #Sundara #hotel
http://www.hotelsundara.in