வேலன் ரதமே மீள்ளாய்...
மீள் ரதமே மீள்.
மயிலன் ரதமே உருகுலைந்து கிடக்கிறது....
வாழ்ந்து கெட்ட மனிதனைப்போல குறுகி, குமைந்து, கிடக்கிறது...
எந்த வீதியில் ஒய்யாரமாக ஓடியதோ அதே வீதியில் ஓரமாய், போவோர் வருவோரைப் பார்த்த வண்ணம் இருக்கிறது...
பல நூறு கைகள் சேர்ந்து, தொட்டு இழுத்த வடம் கோவிலுக்குள் தொட ஆளில்லாமல் சுருண்டு கிடக்கிறது...
விறகாகிப்போன தேரின் அருகில் சென்று காது கொடுத்து கேட்டால் வாழ்வின் நிலையாமையை சொல்லிக்கொண்டிருக்கிறது.
தொட்டுப் பாரத்து வந்தேன்... ஜென்மாந்திர உறவின் பந்தம் தெரிந்தது....
நம் தலைமுறை வடம் பிடிப்போம்..
உங்கள்
உத். தும்பிக்கை நண்பன்..
No comments:
Post a Comment